/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து மாநில நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பு

ADDED : ஏப் 06, 2024 05:51 AM

சிதம்பரம்: சிதம்பரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளரும்,முருகுமாறன், முன்னாள் அமைச்சர் தாமோதரன் ஆகியோர் ஓட்டு சேகரித்தனர்.
காட்டுமன்னார்கோயில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் உள்ள ஆனந்தகுடி, கொக்கராசன் பேட்டை, ஸ்ரீ புத்துார், குணமங்கலம் , கள்ளிப்பாடி, அம்புஜவல்லி பேட்டை, நெடுஞ்சேரி நாச்சியார் பேட்டை, கூடலையாத்துார், காவாலக்குடி, முடிகண்டநல்லுார், மழவராயநல்லுார், குமாரகுடி, கோதண்டவிளாகம், நந்தீஸ்வர மங்கலம் 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தனர்.
மாநில அம்மா பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கானுார் பாலசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் ஜோதி பிரகாஷ் நவநீதகிருஷ்ணன், ஸ்ரீமுஷ்ணம் பேரூர் கழக செயலாளர் பூமாலை கேசவன், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் குணசேகரன் தொகுதி கழக முன்னாள் செயலாளர் கள்ளிப்பாடி சண்முகம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் வேலு ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.