ADDED : ஆக 13, 2024 05:39 AM
கடலுார்: கடலுாரில் விவசாயத் தொழிலாளர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலுார் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மகாத்மாகாந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வேலை வழங்க வேண்டும். சுத்துக்குளம் ரயில்வே கேட் சாலையை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய சங்க மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் நடராஜன், கோதண்டபாணி, வீரக்கண்ணு, சுமதி, மீனாட்சி, பாவாடைசாமி, அய்யாத்துரை, பாண்டியன், பக்கிரி, நீலநாராயணன், வளர்மதி, மூர்த்தி, சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.