/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது தப்பிக்க முயன்றதில் கை, கால் முறிந்தது

ADDED : பிப் 28, 2025 05:41 AM

கடலுார்: கடலுார் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவானவர், போலீசாரை கண்டு தப்பிச் செல்ல முயன்றதால் கை, கால் முறிந்தது.
கடலுார் அடுத்த டி.புதுார் நாகராஜ் மகன் அப்புராஜ்,22. எம்.புதுார் பாலகுரு மகன் சரண்ராஜ்,22. ஆகியோரை கொலை செய்து புதைத்த வழக்கில், எம்.புதுாரை சேர்ந்த பால்ராஜ்,22; தமிழ்ச்செல்வன் மகன் தருண்குமார்,19; ஆகியோரை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது இருவரின் கால் முறிந்ததால், சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய கடலுார் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த மாறன் மகன் கோகுலகிருஷ்ணன், 23; கடலுார் கம்மியம்பேட்டை ரயில்வே மேம்பாலம் பகுதியில் பதுங்கியிருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சென்றனர்.
போலீசாரை கண்ட கோகுலகிருஷ்ணன் தப்பிச் செல்வதற்காக பாலத்தில் இருந்து குதித்தபோது அவரது வலது கால் மற்றும் இடது கை முறிந்தது.
அவரை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்