/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 14, 2025 05:25 AM

சிதம்பரம்: குமராட்சியில் உள்ள காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயிற்றுவிப்பு, வழிகாட்டு மையம் சார்பில் புத்தக கண்காட்சி மற்றும் போட்டித் தேர்வுகள் எதிர்கொள்ளது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் மீனா தலைமை தாங்கி, புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் சரவணன் வரவேற்றார். வழிகாட்டு மைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சாய் பிரியா, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள படிக்க வேண்டிய புத்தகங்கள், அரசு சார்பில் மாணவர்களுக்கு நடத்தும் வகுப்புகள் குறித்தும், ஆன்லைன் வகுப்புகள் குறித்தும் பேசினார்.
மாவட்ட தொழில் மைய அலுவலர் விபித், மாணவர்கள் தொழில் துவங்குவது மற்றும் அதற்கு கடனுதவி பெறுவது குறித்து பேசினார். தன்னார்வ பேச்சாளர் ஸ்ரீதர், போட்டித் தேர்வுகளுக்கு தயாராக பின்பற்ற வேண்டியவைகள் குறித்து பேசினார். இதில், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சுரேஷ் நன்றி கூறினார்.