ADDED : ஜூன் 04, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த அரசடிக்குப்பம் கிராமத்தில் தீவிபத்தில் பாதித்த குடும்பத்திற்கு பா.ம.க.. மாவட்ட செயலாளர் ஜெகன் நிவாரண உதவி தொகை வழங்கினார்.
பண்ருட்டி அடுத்த அரசடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் இளங்கோவன். இவரது கூரை வீடு மின்கசிவால் தீப்பிடித்து எரிந்து வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தது. தகவலறிந்த பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெகன் பாதிக்கப்பட் குடும்பத்திரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் மற்றும் உதவி தொகை வழங்கினார்.
இதில் நெய்வேலி கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தராமன், ஒன்றியத் தலைவர் அருணகிரி, ஒன்றிய அமைப்பு செயலாளர் அமிர்தலிங்கம், சிவராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.