/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் மோதி என்.எல்.சி., அதிகாரி பலி ரூ.1.75 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

ADDED : மார் 24, 2024 04:21 AM
கடலுார்: பைக் மோதி இறந்த என்.எல்.சி., அதிகாரி குடும்பத்திற்கு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கடலுார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடலுார், ஆனைக்குப்பத்தைச் சேர்ந்தவர் சேகர், 57; நெய்வேலி என்.எல்.சி.,யில் உதவி நிர்வாக அதிகாரியாக பணி புரிந்தார்.
இவர், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி, மஞ்சக்குப்பம், மணிகூண்டு அருகே பைக்கில் சென்ற போது, எதிரில் வந்த பைக் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இழப்பீடு கேட்டு, அவரது மனைவி பவானி கடலுார் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் 1ல் வழக்குத் தொடர்ந்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், உஷாராணி, கலையரசன் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், சேகர் குடும்பத்திற்கு இழப்பீடாக நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.