/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார் மீது டிப்பர் லாரி மோதல் தொழிலதிபர் உடல் நசுங்கி பலி
/
கார் மீது டிப்பர் லாரி மோதல் தொழிலதிபர் உடல் நசுங்கி பலி
கார் மீது டிப்பர் லாரி மோதல் தொழிலதிபர் உடல் நசுங்கி பலி
கார் மீது டிப்பர் லாரி மோதல் தொழிலதிபர் உடல் நசுங்கி பலி
ADDED : செப் 11, 2024 01:58 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், தொழிலதிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள அம்மேரி கொக்கன் குப்பத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,58; தொழிலதிபரான இவர், ஏ.டி.ஆர்., லாரி சர்வீஸ் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் தனது மகேந்திரா பொலிரோ காரில் அணைக்கரை செல்வதற்கு நெய்வேலியில் இருந்து இரவு 8:30 மணிய ளவில் புறப்பட்டு சென்றார். நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த விக்னேஷ், 30, என்பவர் காரை ஓட்டினார்.
சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி உயர்மட்ட பாலத்தில் சென்றபோது, எதிரே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது. இவ்விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியதில், ரவிச்சந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த டிரைவர் விக்னேஷ், சிதம்பரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சோழத்தரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

