/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு
/
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு
ADDED : மே 16, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிதம்பரம் அடுத்த மடுவங்கரை கிராமத்தை சேர்ந்த மணிவாசகத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த மார்ச் 19ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன்றிய மகளிர் ஊர்நல அலுவலர் சாந்தா அளித்த புகாரின் பேரில், மணிவாசகம், அவரது தந்தை கிருஷ்ணகுமார், தாய் அஞ்சம்மாள், சிறுமியின் தந்தை சசிகுமார், தாய் அங்கையற்கண்ணி ஆகியோர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

