/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எனதிரிமங்கலம் ஆற்றில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு
/
எனதிரிமங்கலம் ஆற்றில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு
ADDED : பிப் 23, 2025 05:48 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த எனதிரி மங்கலம் தென் பெண்ணை யாற்றில் சுடுமண் குடுவை, கருப்பு சிவப்பு ஓடுகள் கண்டெடுக்கப் பட்டன.
பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை முதுகலை 2ம் ஆண்டு மாணவர் ராகுல் மற்றும் வரலாற்று ஆர்வலர் பிரதாப் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குறியீடு பொறித்த சிவப்புநிற சுடுமண் குடுவை மற்றும் குறியீடு உள்ள கருப்பு மற்றும் சிவப்பு நிறமுள்ள ஓடுகளை கண்டறிந்தனர்.
ஆற்றில் கண்டறிந்த குறியீடுகள் தொல்லியல் துறையினரால் ஈரோடு அருகே உள்ள கொடுமணல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு இவைகள் ஒத்துள்ளதை காண முடிகிறது, சுமார் 2000 ஆண்டுகள் பழமையானதாக இந்த குறியீட்டு காலத்தை கணிக்க முடிகிறது என, தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்தார்.

