/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேப்பூரில் திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
/
வேப்பூரில் திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 13, 2024 07:05 AM

வேப்பூர்: வேப்பூர் பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட நல்லுார் ஒன்றியத்தில், உங்கள் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. மேலும், நல்லுார் வில்வனேஸ்வரர் கோவில் அருகே படித்துறை, இலங்கியனுாரில் தடுப்புச்சுவர் மற்றும் ரயில்வே மேம்பாலம், மணிமுக்தாற்றில் தடுப்பணை உள்ளிட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் சட்டசபையில் வலியுறுத்தினார்.
அதையடுத்து, திட்டப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நல்லுார் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம், வேப்பூர் தாசில்தார் மணிகண்டன், நல்லுார் பி.டி.ஓ., சண்முக சிகாமணி, காங்., முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, தி.மு.க., நிர்வாகிகள் அன்புக்குமரன், முருகேசன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

