/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வரை வரவேற்க திரண்டு வாருங்கள்; அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு
/
முதல்வரை வரவேற்க திரண்டு வாருங்கள்; அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு
முதல்வரை வரவேற்க திரண்டு வாருங்கள்; அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு
முதல்வரை வரவேற்க திரண்டு வாருங்கள்; அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு
ADDED : பிப் 22, 2025 07:23 AM
கடலுார்; கடலுார் மாவட்டம், வேப்பூர் திருப்பெயரில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் மண்டல மாநாட்டிற்கு வரும் முதல்வரை வரவேற்க கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்க திரண்டு வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர், பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
முதல்வர் ஸ்டாலின், கடலுார் மாவட்டம், வேப்பூர் திருப்பெயரில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் மண்டல மாநாட்டிற்கு செல்லும் வழியில் 22ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நெய்வேலி மந்தாரக்குப்பம், வடக்கு வெள்ளூர் பஸ் நிலையம், ஊமங்கலம், ஊத்தாங்கள், கொம்பாடிக்குப்பம், அரசக்குழி, வி.சாத்தமங்கலம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சம்பந்தப்பட்ட கடலுார் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் கிளை வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, லோக்சபா உறுப்பினர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.