ADDED : ஜூலை 29, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
டவுன் பஸ் இயக்கப்படுமா?
திட்டக்குடியில் இருந்த பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை சென்ற அரசு டவுன்பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– அண்ணாதுரை, தெத்தேரி.
புகார் பெட்டி
கழிவுநீர் அகற்றப்படுமா?
பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகம் முதல் போலீஸ் ஸ்டேஷன்வரை வடிகால் வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– தனசேகரன், பெ.பொன்னேரி.
ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்
கடலுார்–திருவந்திபுரம் சாலையில் சப் ரிஜிஸ்டர் ஆபிஸ் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கிருஷ்ணன், திருப்பாதிரிப்புலியூர்.
