ADDED : ஏப் 16, 2024 06:08 AM
நெல்லிக்குப்பம். : நெல்லிக்குப்பம் தி.மு.க.,வினர், நகர செயலாளர் மணிவண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இரண்டு கோஷ்டியாக செயல்படுகின்றனர். கடலுார் காங்., விஷ்ணுபிரசாத்திற்கு இரு அணிகளாகவே சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள், காமராஜர் நகர் பகுதியில் நேற்று ஓட்டு கேட்டனர். அப்பகுதி காங்., கவுன்சிலர் சரளா என்பவர், ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் என்பதால் அவரை ஒட்டு கேட்க அழைக்கவில்லை என தெரிகிறது.
இதையறிந்த சரளா, 'தனது வார்டில் என்னை அழைக்காமல், எனது கட்சி வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பதா' என, பொங்கி எழுந்தார். தனது ஆதரவாளர்களுடன், மணிவண்ணனிடம் நியாயம் கேட்டார். அப்போது, வாக்குவாதம் முற்றி, தி.மு.க., மற்றும் காங்., கட்சியினரிடையே தள்ளு முள்ளில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

