தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிலாளி கொலை கட்டட மேஸ்திரி சரண்

தொழிலாளி கொலை கட்டட மேஸ்திரி சரண்

தொழிலாளி கொலை கட்டட மேஸ்திரி சரண்


ADDED : ஜூலை 21, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலுார்: வடலுாரில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், விழுப்புரம் போலீசில் சரணடைந்தார்

வடலுார் அடுத்த ராஜாக்குப்பம், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை மகன் தங்கதுரை, 21; கட்டட மேஸ்திரி.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி வேல்முருகன் மகன் வீரமணி, 23; என்பவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்தது.

இந்த நிலையில் கடந்த, 19ம் தேதி, வீட்டின் வெளியே சாப்பிட்டுக் கொண்டிருந்த தங்கதுரையை வீரமணி கழுத்தில் கத்தியால் அறுத்து கொலை செய்தார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த வடலுார் போலீசார், கொலை செய்து தலைமறைவான வீரமணியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் வீரமணி சரணடைந்தார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us