/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வியாபாரிகளுடன் ஆலோசனை
/
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வியாபாரிகளுடன் ஆலோசனை
ADDED : மே 05, 2024 03:56 AM
பண்ருட்டி, : பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வியாபாரிகள், அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
நகராட்சி கமிஷனர் பிரீத்தி தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் , செயலாளர் வீரப்பன், பொருளாளர் கருணாநிதி, அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தும் கேரி பேக், பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தக்கூடாது. அவைகளை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்து, அபராதம் விதிக்கப்படும் என கமிஷனர் அறிவுறுத்தினார்.
மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.