/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலத்தில் இருந்து விழுந்தவர் இறப்பு
/
பாலத்தில் இருந்து விழுந்தவர் இறப்பு
ADDED : ஏப் 05, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே பாலத்திலிருந்து கீழே விழுந்து சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.
பாலுார் அடுத்த பல்லவராயநத்தம் தொட்டியை சேர்ந்தவர் ஏழுமலை,60; இவர் கடந்த மாதம் 21ம் தேதி சி.என்.பாளையம் ஐயனார் கோவில் அருகே உள்ள பாலத்தின் கட்டை யில் உட்கார்ந்திருந்தார். எதிர்பாராத விதமாக பாலத்திலிருந்து கீழே விழுந்தார்.
இதில் ஏழுமலையின் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஏழுமலை நேற்று இறந்தார்.
அவரதுமனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

