/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகளை கண்டித்து கரிவெட்டியில் ஆர்ப்பாட்டம்
/
என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகளை கண்டித்து கரிவெட்டியில் ஆர்ப்பாட்டம்
என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகளை கண்டித்து கரிவெட்டியில் ஆர்ப்பாட்டம்
என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகளை கண்டித்து கரிவெட்டியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 30, 2024 06:04 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி கிராமத்தில் வாழ்வாதாரம், மாற்று குடியிருப்பு, வேலை வாய்ப்பு வழங்காமல் என்.எல்.சி., அதிகாரிகள் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வி.சாத்தப்பாடி, ஊ.ஆதனுார், வளையமதேவி ஆகிய 7 கிராமங்களில் கடந்த 2000 முதல் 2016ம் ஆண்டு வரை நிலங்களை என்.எல்.சி., நிறுவனம் கையகப்படுத்தியது. அப்போது, ஏக்கருக்கு 2 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரையில் பணம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், நிலம் கொடுத்தவர்கள், புதிய குடியமர்வு திட்டத்தில் ஏக்கருக்கு 25 லட்சம் தொகை மற்றும் மாற்று குடியிருப்பு, வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு கேட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில், கரிவெட்டி கிராமத்தில் என்.எல்.சி., கையகப்படுத்திய வீடுகளை காலி செய்து கொடுக்குமாறு, என்.எல்.சி., அதிகாரிகள் கேட்டு வருகின்றனர்.
நேற்று பகல் 12.00 மணியளவில் கையகப்படுத்திய இடத்தை அளவீடு செய்ய என்.என்.சி., அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் வருவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால், ஆத்திரமடைந்த கரிவெட்டி கிராம மக்கள் மற்றும் நிலம், வீடு.மனை உரிமையாளர் சங்கத்தினர் ஒன்று திரண்டு என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்த மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் அறிவித்த திட்டங்களையும் நடைமுறை படுத்த வேண்டும், வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று குடியிருப்பு, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
மக்கள் கூடியிருப்பதை கண்ட என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகள் ஊருக்குள் வராமல் திரும்பி சென்றனர். அதையடுத்து, பகல் 12:40 மணியளவில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

