/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட கூடைப்பந்து அணி 13ம் தேதி தேர்வு
/
மாவட்ட கூடைப்பந்து அணி 13ம் தேதி தேர்வு
ADDED : ஏப் 10, 2024 01:55 AM
கடலுார் : கடலுார் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு மாணவ, மாணவியர்கள் வரும் 13ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து மாவட்ட கூடைப்பந்து சங்கம் தலைவர் வெங்கட்சுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு, வரும் 13ம் தேதி காலை 8:00 மணிக்கு அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து அரங்கில் மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்கலாம். 01.01.2006ம் ஆண்டுக்கு பிறகு பிறந்திருக்கு வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியர், திருச்சியில் வரும் 22ம் தேதி முதல் 26 வரை நடைபெறும் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடலுார் மாவட்ட அணி சார்பாக கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

