/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டீ மாஸ்டராக மாறிய தே.மு.தி.க., வேட்பாளர்
/
டீ மாஸ்டராக மாறிய தே.மு.தி.க., வேட்பாளர்
ADDED : ஏப் 14, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுாரில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து டீக்கடையில் டீ போட்டு கொடுத்து முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
கடலுார் உழவர் சந்தையில் நேற்று காலை தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, முரசு சின்னத்திற்கு ஆதரவு கேட்டு கூட்டணி கட்சியினருடன் ஓட்டு சேகரித்தார். அப்போது திடீரென அங்குள்ள டீக்கடையில் வேட்பாளர் சிவக்கொழுந்து, டீ மாஸ்டராக மாறி, டீ போட்டு பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் கொடுத்து ஓட்டு கேட்டார்.
அப்போது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத், தே.மு.தி.க., துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

