/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தே.மு.தி.க., சிவக்கொழுந்துவை வெற்றி பெற செய்ய வேண்டும்: மாஜி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
/
தே.மு.தி.க., சிவக்கொழுந்துவை வெற்றி பெற செய்ய வேண்டும்: மாஜி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
தே.மு.தி.க., சிவக்கொழுந்துவை வெற்றி பெற செய்ய வேண்டும்: மாஜி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
தே.மு.தி.க., சிவக்கொழுந்துவை வெற்றி பெற செய்ய வேண்டும்: மாஜி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
ADDED : ஏப் 09, 2024 04:42 AM

பண்ருட்டி' தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேசினார்.
கடலுார் லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து, பண்ருட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வீரப்பெருமாநல்லுார், குடுமியான்குப்பம், சிறுகிராமம், நத்தம், மணம்தவிழ்ந்தபுத்துார், ராயர்பாளையம், கொளப்பாக்கம், சேமக்கோட்டை, மணப்பாக்கம், கட்டியாம்பாளையம், அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம், எல்.என்.புரம், பூங்குணம், கந்தன்பாளையம் பகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் முரசு சின்னத்திற்கு ஓட்டுக் கேட்டு தீவிர பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: :
தே.மு.தி.க., வேட்பாளர் சிவகொழுந்து பண்ருட்டி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். கடந்த 2011-2016 வரை பண்ருட்டி எம்.எல்.ஏ., வாக பணியாற்றியவர். எளிமையானவர்.
அவரை எதிர்த்து தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் போட்டியிடுகிறார். அவர், 2019ல் ஆரணியில் எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டவர். அத்தொகுதியில் மக்கள் எதிர்ப்பு காரணமாக கடலுாருக்கு வந்துள்ளார். சென்னையில் வசிக்கிறார்.
மற்றொருவர் பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான். இவரும் சென்னைவாசிதான். எனவே, இங்கு போட்டியிடும் பா.ம.க., தலைவர் அன்புமணியின் மச்சான் விஷ்ணுபிரசாத்தும் வேண்டாம், பா.ம.க., வேட்பாளர் பச்சானும் வேண்டாம். மண்ணின் மைந்தர் சிவக்கொழுந்துக்கு முரசு சின்னத்தில் ஓட்டளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஜெ., கொண்டு வந்த தாலிக்கு தங்கம் நிறுத்தப்பட்டது. அம்மா உணவகம் மூடப்பட்டது.
அம்மா மினிகிளினிக் நிறுத்தப்பட்டது. விவசாய கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை. நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது முதியோர் உதவிதொகை வழங்கியதும் நிறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் தினமும் விலைவாசி உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆட்சியில், பொங்கலுக்கு ரூ. 2500 கொடுக்கப்பட்டது. ஏரி, குளங்கள் துார்வாரியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது.
எனவே, திடீர் சாம்பார், திடீர் ரசம் போல் எங்கிருந்தோ வந்த காங்., பா.ம.க., வேட்பாளர்களை புறக்கணித்து, தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு, முரசு சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

