ADDED : செப் 03, 2024 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : சிதம்பரம் பள்ளிப்படை பூதகேணியில் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
ஒன்றிய அவைத் தலைவர் நல்லதம்பி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கலையரசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், இளைஞரணி, மகளிரணி சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், ஒன்றிய துணை செயலாளர்கள் பொன்னுசாமி, இளவரசு, செல்வகுமாரி, மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், சேர்மன் கருணாநிதி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ராகவன், கவுன்சிலர் மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.