/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க.,- பா.ஜ.,விற்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்: கடலுாரில் பிரேமலதா பேச்சு
/
தி.மு.க.,- பா.ஜ.,விற்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்: கடலுாரில் பிரேமலதா பேச்சு
தி.மு.க.,- பா.ஜ.,விற்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்: கடலுாரில் பிரேமலதா பேச்சு
தி.மு.க.,- பா.ஜ.,விற்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்: கடலுாரில் பிரேமலதா பேச்சு
ADDED : ஏப் 08, 2024 05:15 AM

கடலுார்: கடலுார் தொகுதியில் போட்டியிடுவது மச்சானா இருந்தாலும், பச்சனா இருந்தாலும், அவர்கள் பாச்சா பலிக்காது என, தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.
கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து, தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மெகா கூட்டணி அமைத்துள்ளார். நாளை சரித்திரம் படைக்கும் கூட்டணி என்பதை தேர்தலில் நிருபிக்க வேண்டும். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு சட்டசபை தேர்தலில் முதல் வெற்றியை தந்தது விருத்தாசலம் தொகுதி.
தி.மு.க., வின் அராஜகத்திற்கு அளவே இல்லாமல் உள்ளது. கடலுாரில் பெயருக்குத்தான் பெண் மேயர், கணவர்தான் மேயராக செயல்படுகிறார். மாநகராட்சியில் வரி பாக்கி வைத்துள்ளவர்களை குண்டர்களை வைத்து மிரட்டுகின்றனர். இந்த அராஜாகம் எங்கும் நடக்காது. வரி பாக்கி செலுத்தவில்லை எனக் கூறி, கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி முதல்வர் அறையை பூட்டி சீல் வைத்தனர்.
இங்கு, மாநகர நடைபாதை வியாபாரிகளின் நிலை மோசமாக உள்ளது. கஞ்சா, போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது.
கடலுார் லோக்சபா தொகுதியில் ஒரு கட்சியில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். மற்றொரு கட்சியில் (அன்பு மணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத்) மச்சான் போட்டியிடுகிறார். பச்சானா இருந்தாலென்ன, மச்சானா இருந்தாலென்ன இவர்கள் பாச்சா இங்கு பலிக்காது.
சிவக்கொழுந்துவை வெற்றிபெற செய்து, பொய் வாக்குறுதிகளை கூறிய தி.மு.க.,-பா.ஜ., விற்கு சவுக்கடி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

