ADDED : செப் 05, 2024 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் தி.மு.க., கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பழனிமனோகரன், மகளிரணி அமுதாராணி,மாவட்ட கவுன்சிலர் மனோரஞ்சிதம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் செல்வராசு வரவேற்றார்.
கூட்டத்தில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தி.மு.க.,கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பது,அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மாவட்ட சார்பணி அணியினர் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.