/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டென்ஷன் படுத்தாதீங்க... கலெக்டர் கடும்கோபம்
/
டென்ஷன் படுத்தாதீங்க... கலெக்டர் கடும்கோபம்
ADDED : ஏப் 24, 2024 07:21 AM

பத்தம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், கடலுார் மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. தமிழக அளவில் மாவட்டம் இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் படிப்பதற்கான வசதி வாய்ப்பு இருந்தும், ஏன் படிப்பதில்லை என கேள்வி எழுகிறது.
இந்நிலையில், நெல்லிக்குப்பம் பகுதியில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அருண் தம்புராஜ், முள்ளிகிராம்பட்டு நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு மாணவ, மாணவியர் முழு ஆண்டு தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தனர்.
வகுப்பறைக்குள் சென்ற கலெக்டர், மாணவர்களிடம் புத்தகத்தை வாங்கி கேள்வி கேட்டார். அதற்கு மாணவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.
அதனால் கலெக்டர் கடுங்கோபம் அடைந்தார். மாணவர்களுக்கு ஒழுங்காக சொல்லிக்கொடுத்தால்தானே படிப்பதற்கு. இங்கு படிக்கின்ற படிப்புதான் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு செல்லும் போது சிறந்த மதிப்பெண் வாங்க உறுதுணையாக இருக்கும்.
இப்படி இருந்தால், எப்படி மாவட்டம், அரசு பொதுத்தேர்வில் சாதிக்க முடியும் என, தலைமை ஆசிரியையிடம் கோபமாக பேசிவிட்டு புறப்பட்டார். அப்போது, கலெக்டரை மற்றொரு வகுப்பறைக்கு தலைமை ஆசிரியை அழைத்துள்ளார்.
இதனால் மேலும் கடுப்பான கலெக்டர், இன்னும் டென்ஷன் படுத்தாதீங்க... மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என, கூறிவிட்டு, பள்ளியில் இருந்து வேகமாக வெளியேறினார்.

