நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க கடலூர் மாவட்ட கூட்டம், மாநில இணைப் பொது செயலாளர் மணி தலைமையில் நடந்தது.
கவுரவ தலைவராக ஜெயபால், தலைவராக பாலகார்த்திகேயன், செயலாளராக ஜெகதீசன், பொருளாளராக மணி, துணைத் தலைவர்களாக தட்சணாமூர்த்தி, அண்ணாதுரை, துணை செயலாளர்களாக சுப்ரமணியன்,பிரகாஷ், இணை செயலாளர்களாக சரவணன், பன்னீர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சலவை தொழிலாளர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு, இலவச வீட்டு மனைப்பட்டா, சலவை இயந்திரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.