நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : வடலுார் நெய்வேலி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மூர்த்தி, 60; இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி லலிதாவுடன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மூர்த்தியின் அண்ணன் தனகோபால், அவரது மகன் தினகரன் இருவரும் வந்து, இட பிரச்னை காரணமாக பேச வேண்டும் எனக் கூறி தகராறு செய்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், தினகரன் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் மூர்த்தியை குத்தினார். தனகோபால் தடியால் தாக்கியுள்ளார். இது குறித்து மூர்த்தி மனைவி லலிதா கொடுத்த புகாரில், வடலுார் போலீசார் வழக்கு பதிந்து தினகரன், 42; தனகோபால், 72; இருவரையும் கைது செய்தனர்.