/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கில் கஞ்சா கடத்தல் நான்கு பேர் கைது
/
பைக்கில் கஞ்சா கடத்தல் நான்கு பேர் கைது
ADDED : பிப் 28, 2025 05:46 AM

கடலுார்: கடலுார் அருகே பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த கும்தாமேடு சோதனைசாவடியில், மதுவிலக்கு அமல்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சிவகுரு நாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை சந்தேகத் தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில், பையில் ஒன்றரை கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், புதுச்சேரி மாநிலம், பாகூர் ஈச்சங்காட்டை சேர்ந்த கார்த் திகேயன், 31; குமரேசன், 30; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணையில் அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு பொன்னுசாமி மகன் ஜெகநாதன், 22; வானுார் சுந்தரமூர்த்தி மகன் பிரவீன்குமார், 19; ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மூன்று பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.