/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இனி உங்கள் அன்னையாக இருப்பேன் தே.மு.தி.க., பிரேமலதா உருக்கம்
/
இனி உங்கள் அன்னையாக இருப்பேன் தே.மு.தி.க., பிரேமலதா உருக்கம்
இனி உங்கள் அன்னையாக இருப்பேன் தே.மு.தி.க., பிரேமலதா உருக்கம்
இனி உங்கள் அன்னையாக இருப்பேன் தே.மு.தி.க., பிரேமலதா உருக்கம்
ADDED : ஏப் 10, 2024 03:19 AM

விருத்தாசலம் : இதுவரை உங்களின் அண்ணியராக இருந்த நான், இனி உங்கள் அன்னையாக இருப்பேன் என, பிரேமலதா பேசினார்.
கடலுார் லோக்சபா தொகுதியில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் சிவக்கொழுந்துவை ஆதரித்து, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா விருத்தாசலத்தில் பிரசாரம் செய்தார். அவருக்கு, அ.தி.மு.க., அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., தலைமையில், தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார், பேரவை துணை செயலாளர் அருள்அழகன், மண்டல செயலாளர் வழக்கறிஞர் அருண், மண்டல பொறுப்பாளர் அரங்க மணிவண்ணன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன், வழக்கறிஞர் விஜயகுமார், தே.மு.தி.க., நகர செயலாளர் ராஜ்குமார், மாநில செயற்குழு ரமேஷ், நகர பொருளாளர் கருணா, மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
பெண்ணாடம்
கடலுார் லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து பெண்ணாடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், 'கடலுார் தொகுதியில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார் என்று நினைக்க வேண்டாம். நமது கேப்டன் தான் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். நம் கேப்டன் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் இருக்கிறார். இதுவரை உங்களது அண்ணியாராக இருந்தேன். இனிமேல் உங்கள் அன்னையாக இருப்பேன். கேப்டன் லட்சியத்தை நாம் வெல்வோம். இந்த கூட்டணி மகத்தான வெற்றி கூட்டணி.
இந்த தொகுதியில் போட்டியிடும் மற்றவர்கள் ஒருவர் தங்கர்பச்சான்... மற்றொருவர் மச்சான்... பச்சானும் சரி... மச்சானும் சரி... இந்த கூட்டத்திற்கு முன்னாடி ஒன்னும் பலிக்காது. அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., ஆகிய கூட்டணி கட்சிகள் நான்கு எழுத்து, தேர்தல் முடிவு வருவதும் ஜூன் 4 என, பேசினார்.

