ADDED : ஜூலை 30, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் மந்தக்கரை தெருவில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலில், சிதம்பரம் செங்குந்தர் இளைஞர் சங்கத்தின் சார்பில், ஆடி கிருத்திகை முன்னிட்டு கந்தரநுபூதி தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இதில் சொற்பொழிவாளர்கள் ரத்தின ஓதுவார், பேராசிரியர் முத்துக்குமரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ராகவன், பிரகாஷ், பொன்னம்பலம் மற்றும் தங்க அன்பழகன் ஆகியோர் விளக்க உரை மற்றும் சொற்பொழிவாற்றினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிதம்பரம் செங்குந்தர் இளைஞர் சங்க தலைவர் ஆனந்த சபேசன், செயலாளர் அருண்குமார் , பொருளாளர் ராஜாராம், சங்க முன்னோடிகள் கோவிந்தராஜன், பொன்னம்பலம், தில்லை கோவிந்தன், செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.