/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு
/
சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு
ADDED : மார் 31, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலையில் கிடந்த 25 ஆயிரம் ரூபாயை தனியார் பள்ளி ஆசிரியர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் இளையகுமார், 35. விருத்தாசலம் ஆலடி அடுத்த மணக்கொல்லையை சேர்ந்தவர். இவர் நேற்று காலை பள்ளிக்கு பைக்கில் சென்றபோது, சாத்தமங்கலம் தரைப்பாலம் அருகே 25 ஆயிரம் ரூபாய் பணம் கிடந்தது. அதை, ஸ்ரீமுஷ்ணம் போலீசில் ஒப்படைத்தார்.
கீழே கிடந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆசிரியர் இளையகுமாரை சக ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

