/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தோட்டக்கலை கல்லுாரி மாணவியர் கிராமப்புற மதிப்பீடு செயல் விளக்கம்
/
தோட்டக்கலை கல்லுாரி மாணவியர் கிராமப்புற மதிப்பீடு செயல் விளக்கம்
தோட்டக்கலை கல்லுாரி மாணவியர் கிராமப்புற மதிப்பீடு செயல் விளக்கம்
தோட்டக்கலை கல்லுாரி மாணவியர் கிராமப்புற மதிப்பீடு செயல் விளக்கம்
ADDED : மே 20, 2024 05:29 AM

கடலுார் : காரணப்பட்டில், திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர்கள் சார்பில் கிராமப்புற மதிப்பீடு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இக்கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவிகள் பூமிகா, வகீர்த்தனா, அபிதா, செஹரிதா, அகல்யா, நிவேதா, விவைஸ்யா, ஹரிணா ஆகியோர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கடலுார் அடுத்த பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி கிராமப்புற சூழ்நிலைகள் மற்றும் விவசாய தொழில்நுட்பங்களின் நிலை குறித்து பயிற்சி பெற்றனர்.
அதன் ஒரு பகுதியாக காரணப்பட்டு கிராமத்தில் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு எனும் காலநிலை அட்டவணை, வெண் வரைபடம், வள வரைபடம், தொழில் வரைபடம், இன்னல் வரைபடம் போன்றவற்றை விவசாயிகள் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து செயல் விளக்கம் அளித்தனர்.
பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலைய தலைவர் விஜய்செல்வராஜ் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.