ADDED : மே 30, 2024 11:02 PM
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் கவரப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் மகன் மகேந்திரன், 45; இவர் திருச்சி, ரயில்வே ஒர்க்க்ஷாப்பில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு, திருமணமான சில மாதங்களிலேயே, அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதிலிருந்து மன வருத்தத்துடன் இருந்து வந்த மகேந்திரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துவிட்டு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.
அதனை அடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிதம்பரம், மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன், நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.