/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுரங்கவியல் பட்டய படிப்பு வகுப்புகள் துவக்கம்
/
சுரங்கவியல் பட்டய படிப்பு வகுப்புகள் துவக்கம்
ADDED : ஆக 10, 2024 06:04 AM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், சுரங்கவியில் பட்டயப்படிப்பு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் - என்.எல்.சி.,கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தஅடிப்படையில், 2016 ஆம் ஆண்டு முதல் சுரங்கவியல் பட்டய படிப்பு பல்கலைகழத்தில் துவங்கி நடந்து வருகிறது. 2024--25 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, முடிந்து, வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
அண்ணாமை பல்கலை பொறியல் துறை வளாகத்தில் உள்ள சுரங்கவியல் கருத்தரங்கு கூடத்தில் நடந்தவிழாவில் பட்டய படிப்பின் இயக்குனர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, என்.எல்.சி.,நிறுவனத்தின், சுரங்கங்கள் மற்றும் நிலங்களுக்கான செயல் இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ் பங்கேற்று வகுப்புகளை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியை இணைப் பேராசிரியர் சிவராஜ் தொகுத்து வழங்கினார்.பேராசிரியர் பழனிவேல்ராஜா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை இணை பேராசிரியர்கள் வினோத்குமார், பாலமுருகன், பிரேம்குமார் மற்றும் துணை பேராசிரியர் ராஜசோமசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

