/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுவர் விளம்பரமா... கரித்துண்டு போதும் விரக்தியில் பா.ஜ., நிர்வாகிகள்
/
சுவர் விளம்பரமா... கரித்துண்டு போதும் விரக்தியில் பா.ஜ., நிர்வாகிகள்
சுவர் விளம்பரமா... கரித்துண்டு போதும் விரக்தியில் பா.ஜ., நிர்வாகிகள்
சுவர் விளம்பரமா... கரித்துண்டு போதும் விரக்தியில் பா.ஜ., நிர்வாகிகள்
ADDED : ஏப் 05, 2024 05:10 AM
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் பா.ஜ., நிர்வாகிகள் செலவு செய்ய முறையாக 'கவனிப்பு' இல்லாததால் விரக்தியில் தேர்தல் பணியில் பட்டும் படாமலும் ஈடுட்டு வருகின்றனர்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் தீவிரமாக ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., வேட்பாளர் திருமாவளவன், அ.தி.மு.க., சார்பில் சந்திரகாசன், பா.ஜ., சார்பில் கார்த்தியாயினி, உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பா.ஜ.,வைத் தவிர மற்ற கட்சியினர் பணத்தை இறக்கி செலவு செய்யத் துவங்கி விட்டனர்.
ஆனால், பா.ஜ., கட்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் செலவு செய்ய இதுவரை 'கவனிப்பு' இல்லாததால் விரக்தியில் உள்ளனர். கிராமங்களில் பா.ஜ., கட்சி சுவர் விளம்பரம் எழுத பணம் வேண்டும் என பணம் கேட்டால் கரித்துண்டை கொண்டு சுவர் விளம்பரங்கள் செய்யுங்கள் எனக் கூறுவதாக தெரிவிக்கின்றனர். தேர்தலுக்கு முன் எங்கள் பணத்தை கொண்டு கட்சிக்கு செலவு செய்தோம். தற்போது கட்சி வேட்பாளர் அறிவித்தவுடன் நாங்கள் ஏன் செலவு செய்ய வேண்டும் என நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால், விரக்தியில் உள்ள நிர்வாகிகள் பலர் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் பட்டும் படாமலும் பணிபுரிகின்றனர்
-நமது நிருபர்-.

