/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
ADDED : ஆக 20, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த தொரப்பாடியில் பேரூராட்சிஅ.தி.மு.க., உறுப்பினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
அண்ணாகிராம ஒன்றிய சேர்மன் ஜானகிராமன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சிவா, ஊராட்சி தலைவர்கள் முருகன், புஷ்பாவதி, அவைத் தலைவர் சுந்தரம், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர் ., மன்ற துணைச் செயலாளர் ராமலிங்கம், நகர பொருளாளர் பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.