sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் மாவட்டத்தின் கல்விக் கோவிலாக திகழும் கிருஷ்ணசாமி குழும கல்லுாரிகள்

/

கடலுார் மாவட்டத்தின் கல்விக் கோவிலாக திகழும் கிருஷ்ணசாமி குழும கல்லுாரிகள்

கடலுார் மாவட்டத்தின் கல்விக் கோவிலாக திகழும் கிருஷ்ணசாமி குழும கல்லுாரிகள்

கடலுார் மாவட்டத்தின் கல்விக் கோவிலாக திகழும் கிருஷ்ணசாமி குழும கல்லுாரிகள்


ADDED : மே 28, 2024 11:24 PM

Google News

ADDED : மே 28, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் மாவட்டத்தின் கல்விக் கோவிலாக கிருஷ்ணசாமி கல்விக்குழும கல்லுாரிகள் திகழ்வதாக, அதன் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் கூறினார்.

அவர் கூறியதாவது:

கல்வி, ஒழுக்கம், உயர்வு என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு கல்விப் பணியில் கிருஷ்ணசாமி கல்விக்குழுமம் இயங்கி வருகிறது. மாவட்டத்தின் கல்விக் கோவிலாக விளங்குவது கிருஷ்ணசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளை.

கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லுாரி, கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல், கலை மற்றும் மேலாண்மை கல்லுாரி, கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய கல்லுாரிகள் திறம்பட நடத்தப்படுகிறது. கடலுார்-நெல்லிக்குப்பம் சாலை குமாரபுரத்தில் இக்கல்லுாரிகள் அமைந்துள்ளன.

இக்கல்லுாரிகளை, செயலாளர் விஜயகுமார், முதன்மை செயல் அலுவலர் டாக்டர் கண்ணன் வழி நடத்தி வருகின்றனர். கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு, 2021-24ம் ஆண்டுகளில் பல முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி, 512 பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லுாரி 2001ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இக்கல்லுாரி முதல்வராக இளங்கோ, துணை முதல்வராக ரகு, நிர்வாக அலுவலராக பாலகிருஷ்ணன் உள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இரண்டாண்டு எம்.சி.ஏ., பட்டப்படிப்பு உள்ள ஒரே பொறியியல் கல்லுாரி இதுவே ஆகும். இக்கல்லுாரியில் ஆண்டு தோறும் ஐந்து முதல் பத்து மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் இடம் பிடித்து பெருமை சேர்க்கின்றனர்.

இங்கு, 2021-24ம் ஆண்டுகளில் பொறியியல் கல்லுாரியில் இதுவரை 555 பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 600க்கும் மேற்பட்ட கணிணிகளை கொண்ட ஆய்வகங்களில் இக்கல்லுாரி மாணவர்கள் பயன் பெறுவதுடன் அல்லாமல் TCSion உடன் கைகோர்த்து GATE, JEE, NEET, TNPSC, RRB, BANK போன்ற ஆன்லைன் தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முழு நுாலகம் இரண்டு தளங்களில் 50,000க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த புத்தகங்கள், தேசிய மற்றும் பன்னாட்டு பத்திரிகைகள், சஞ்சிகைகள் கொண்டு செயல்படுகிறது.

கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல், கலை மற்றும் மேலாண்மை கல்லுாரி 2007ல் துவங்கப்பட்டது. முதல்வராக நிர்மலா, நிர்வாக அலுவலராக சங்கரநாராயணன் உள்ளனர். ஆண்டுதோறும் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் பல மாணவிகள் இடம்பெற்று பெருமை சேர்க்கின்றனர். 2023-24ம் கல்வியாண்டில் 419 மாணவியருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று கல்லுாரிகளிலும் விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. குறைந்த கட்டணத்தில் பஸ் வசதி, இருபாலருக்கும் தனித்தனியே கட்டணமில்லா விடுதி வசதி மற்றும் குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான, சுவையான சைவ உணவு வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us