/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுரை வீரன் கோவிலில் கும்பாபிேஷக விழா
/
மதுரை வீரன் கோவிலில் கும்பாபிேஷக விழா
ADDED : ஏப் 22, 2024 06:22 AM

கடலுார்: கடலுார் அடுத்த பாதிரிக்குப்பத்தில் மதுரை வீரன் மற்றும் செல்வ விநாயகர், வீர ஆஞ்சநேயர் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 18ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி மற்றும் 19ம் தேதி கோ பூஜை, அங்குரார்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இதையடுத்து, 20ம் தேதி சூரிய பூஜை, மூல மந்திரம், வேத மந்திரம் ேஹாமம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை 6:30 மணிக்குமேல் யாகசாலை பூஜை ேஹாமம், கலச புறப்பாடு மற்றும் காலை 9:15 மணிக்கு விமான கோபுர கும்பாபிேஷகம் மற்றும் காலை 9:30 மணிக்கு மூலவர் மதுரை வீரன், செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், செல்வ விநாயகர், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

