ADDED : மே 13, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: குருவன்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த குருவன்குப்பம் மாரிம்மன், காளியம்மன் கோவில்கள் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாக பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு மேல், இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, மகா தீபாராதனை, காலை 9:30 மணிக்கு மேல், கடம் புறப்பாடுடன் விநாயகர், சப்த கன்னிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 10:15 மணியளவில், மாரியம்மன், காளியம்மன் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து மூலவருக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.