/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூலியம்மன் கோவிலில் 19ம் தேதி கும்பாபிேஷகம்
/
கூலியம்மன் கோவிலில் 19ம் தேதி கும்பாபிேஷகம்
ADDED : ஆக 16, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கீரப்பாளையம் அருகே செங்கல்மேடு ஸ்ரீகூலியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 19ம் தேதி நடக்கிறது.
இக்கோவில் விநாயகர், பாலமுருகன், அய்யனார், வீரன் ஆகிய சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டது. இதற்கான கும்பாபிேஷக விழா வரும் 19ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, இன்று 17ம் தேதி விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. கும்பாபிேஷக தினமான 19ம் தேதி காலை இரண்டாம் யாக சாலை பூஜைகளுடன், கடம் புறப்பாடு துவங்கி காலை 9.00 மணிக்கு மேல் 10:15 மணிக்கள் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கூலியம்மன், விநாயகர், பாலமுருகன், அய்யனார், வீரன் சன்னதிகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.

