/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூதவராயன்பேட்டை கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
/
பூதவராயன்பேட்டை கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : ஜூலை 06, 2024 04:50 AM
புவனகிரி: புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை திரவுபதி அம்மன், சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
இதனை முன்னிட்டு நேற்று பகல் 12:30 மணிக்கு கொடிமரம் பிரதிஷ்டை செய்தனர். மாலை 6.00 மணிக்கு கும்ப அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
இன்று காலை 8.30., மணிக்கு இரண்டாம் யாக சாலை பூஜைகளும், பின்னர் சுவாமி சிலைகள் பிரதிஷ்ட்டை செய்கின்றனர். நாளை 7 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியோடு விழா துவங்கி, கோபூஜை உள்ளிட்ட பூஜைகளுக்குப் பின் , கடம்புறப்பாடு துவங்கி காலை 8:30 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.
ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.