ADDED : மே 17, 2024 11:08 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம் : விருத்தாசலம் ஜே.சி.ஐ., 5 டவர் சார்பில் உழைப்பாளர்கள் தினம், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சங்க கிளைத் தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மண்டல துணைத் தலைவர் மணிகண்டன், முன்னாள் தலைவர் முரளி முன்னிலை வகித்தனர். மண்டல துணைத் தலைவர் விஜயகணேஷ், ஏ.ஜி.பி., பிரீமியர் தலைவர் அன்வர் பாஷா, ஏ.பி.எம்., தலைவர் ஆறுமுகம், மருதை ஆகியோர் ஓவியர் சுரேஷ் என்பவருக்கு உழைப்பாளர் விருது மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
துணைத் தலைவர்கள் ஆனந்தன், ராஜசேகரன், தினேஷ், அருளானந்தம், ஜெயபாலன், குபேந்திரன், ஓவியர் முருகன், பாலகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
செயலாளர் பிரேம்தாஸ் நன்றி கூறினார்.
