/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காலையிலேயே திறக்கப்பட்ட மதுபான பார் மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது

ADDED : ஆக 04, 2024 12:24 AM

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பு திறக்கப்பட்ட தனியார் பாரில் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
பெண்ணாடம் பகுதியில் ஊ.மங்கலம் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று காலை 9:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, காலை 10:00 மணியளவில் பெண்ணாடம், மேற்கு மெயின்ரோடு பகுதியில் உள்ள தனியார் பார் அனுமதிப்பட்ட நேரத்திற்கு முன்பாக திறக்கப்பட்டது தெரியவந்தது.
அதையடுத்து, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 66,550 ரூபாய் மதிப்பிலான 308 மதுபாட்டில்கள், -22,200 ரூபாய் பறிமுதல் செய்து, பார் மேனேஜர் பெ.பொன்னேரியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், 57, பார் ஊழியர் இறையூர் புதுகாலனி சிவா, 51, ஆகியோரை கைது செய்து பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பார் உரிமையாளர் பெண்ணாடம், மெயின்ரோடு விஜயகுமார்ய என்பதும், இவர் அமெரிக்காவில் வசிப்பதும் தெரியவந்தது.
பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து கல்யாணசுந்தரம், சிவா ஆகியோரை கைது செய்தனர். மேலும், வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.