/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாசிமக தீர்த்தவாரி பத்தி உலாத்தல் வைபவம்
/
மாசிமக தீர்த்தவாரி பத்தி உலாத்தல் வைபவம்
ADDED : மார் 15, 2025 12:45 AM

கடலுார்; கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில், சுவாமிகள் எழுந்தருளினர்.
மாசி மகத்தையொட்டி, கடலுாரில் மூன்று நாட்களாக தீர்த்தவாரி உற்சவம் நடந்து வந்தது. 3ம் நாளான நேற்று திருவந்திபுரம் தேவநாதசுவாமி, புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி, பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர், வண்டிப்பாளையம் அங்காள பரமேஸ்வரி, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் உட்பட 50க்கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு தேவனாம்பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது. பக்தர்கள் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி முடிந்து புதுப்பாளையம் கோவிலில், செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அங்கு, சுவாமிகள் பத்தி உலாத்தல் வைபவம் நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்கள் சரவணரூபன், வெங்கடகிருஷ்ணன் மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.