/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டெங்கு பாதித்த பகுதிகளில் மருத்துவ குழு ஆய்வு
/
டெங்கு பாதித்த பகுதிகளில் மருத்துவ குழு ஆய்வு
ADDED : மே 18, 2024 06:04 AM

நடுவீரப்பட்டு : விலங்கல்பட்டு பகுதியில் டெங்கு பாதித்த பகுதியை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டை சேர்ந்த 2 வயது குழந்தைக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடலுார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தாதேவி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ், சுகாதார ஆய்வாளர்கள் குமார், சுந்தர் ஆகியோர் விலங்கல்பட்டு பகுதியில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்து,டெங்கு கொசுவினை கண்டறிந்து அழித்தனர். கொசு தடுப்பு புகை மருந்து தெளித்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். வீட்டில் உள்ள குடிநீரை மூடி வைத்து பாதுகாப்புடன் பயன்படுத்திடவும், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆய்வின் போது மாவட்ட மலேரியா அலுவலர் பாலாஜி, இளநிலை பூச்சியியல் வல்லுநர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

