/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் முதல்வர் தேர்தல் பிரசாரம் திரளாக பங்கேற்க அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

ADDED : ஏப் 05, 2024 11:53 PM
கடலுார்: சிதம்பரத்தில் முதல்வர் பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணி சார்பில் சிதம்பரம் லோக்சபா தொகுதி வி.சி., வேட்பாளர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவன் எம்.பி., மயிலாடுதுறை லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர் வழக்கறிஞர் சுதா ஆகியோரை ஆதரித்து வரும் 6ம் தேதி மாலை 3.00 மணியளவில் சிதம்பரம், புறவழிச்சாலை லால்புரம் அருகில் பிரசார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ளார்.
கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தோழர்கள் பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும்.
அதுசமயம், இக்கூட்டத்தில் தி.மு.க., இண்டியா கூட்டணி கட்சிகளின் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., இந்திய தேசிய காங்., மா.கம்யூ., இந்திய கம்யூ., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வி.சி., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.