/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய டெங்கு தினம் உறுதிமொழியேற்பு
/
தேசிய டெங்கு தினம் உறுதிமொழியேற்பு
ADDED : மே 19, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு, விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். களப்பணி உதவியாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், டயர், தேங்காய் மட்டை, உடைந்த குடங்கள், பிளாஸ்டிக் கப்புகளில் டெங்கு கொசுப்புழுக்கள் வளரும். எனவே, டெங்கு கொசுப்புழுக்களின் மாதிரிகள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் வழங்கிட அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக, அலுவலர்கள் அனைவரும் சுகாதாரம் குறித்த உறுதிமொழியேற்றனர்.

