/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நெய்வேலி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ADDED : ஆக 10, 2024 05:41 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை எம்.எல்.ஏ.சபா ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது.
முகாமை எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்து மனுக்களை பெற்றார். பி.டி.ஒ.,க்கள் சங்கர், சக்தி, தாசில்தார் ஆனந்த், முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுமக்களிடம் இருந்து 510 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.
இதில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் லதா, ஒன்றிய சேர்மன் பாலமுருகன், டாக்டர் அறிவொளி, மண்டல துணை பி.டி.ஒ.ஹரிஹரசுப்ரமணியம், துணை தாசில்தார்கள் கிருஷ்ணா, பாலமுருகன், தேவநாதன், ராஜா, சந்தோஷ்குமார், செல்வகுமார், காடாம்புலியூர் தலைவர் பூவராகவன், ஒன்றிய கவுன்சிலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.