/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு கட்டி தருவதில் பிரச்னை என்.எல்.சி., ஊழியர் கைது
/
வீடு கட்டி தருவதில் பிரச்னை என்.எல்.சி., ஊழியர் கைது
வீடு கட்டி தருவதில் பிரச்னை என்.எல்.சி., ஊழியர் கைது
வீடு கட்டி தருவதில் பிரச்னை என்.எல்.சி., ஊழியர் கைது
ADDED : செப் 09, 2024 04:49 AM

நெய்வேலி: நெய்வேலியில் வீடு கட்டி தருவதில் ஏற்பட்ட தகராறில், என்.எல்.சி., ஊழி யரை தாக்கிய சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 8ல் வசிப்பவர் அய்யப்பன்.53; என்.எல்.சி., முதல் சுரங்க நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தன்னுடன் பணிபுரியும் சக்தி நகர் விரிவாக்கத்தை சேர்ந்த ஏழுமலை, 52; என்பவரிடம் வீடு கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்து, ரூ. 11 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்திற்கான பணிகள் நடக்கவில்லை.
இதனால், ஏழுமலை செய்து வந்த ஒப்பந்த பணியை நிறுத்திவிட்டு வேறு ஆட்களை வைத்து கட்டுமான பணியை அய்யப்பன் செய்தார். இதையறிந்த ஏழுமலை, சம்பவ இடத்திற்கு சென்று கட்டுமானத்திற்காக இறக்கி வைத்திருந்த மணல் மற்றும் ஜல்லியை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் எடுக்க முயற்சித்துள்ளார். அதை, தட்டிக்கேட்ட அய்யப்பனை ஏழுமலை தாக்கியுள்ளார்.
காயமடைந்த அய்யப்பன், நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப் பதிந்து ஏழு மலையை கைது செய்தார்.