/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.2,882 கோடி லாபம் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை
/
ரூ.2,882 கோடி லாபம் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை
ரூ.2,882 கோடி லாபம் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை
ரூ.2,882 கோடி லாபம் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை
ADDED : மே 16, 2024 09:11 PM

நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம், கடந்த நிதியாண்டில், 2,882 கோடி ரூபாய் லாபம் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
என்.எல்.சி., தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறியதாவது:
என்.எல்.சி., நிறுவனம் நிலக்கரி சுரங்கங்களின் சிறப்பான செயல்திறனுக்காக, 13 ஐந்து நட்சத்திர மதிப்பீட்டு விருதுகளை பெற்றுள்ளது. மின் உற்பத்தியை பொறுத்தவரை இரண்டாம் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில், ஓராண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மின் உற்பத்தி, 2,153.41 மில்லியன் யூனிட் எட்டப்பட்டுள்ளது.
நெய்வேலி புதிய அனல் மின் நிலையம், முதல் அனல் மின் நிலையம்- விரிவாக்கம் மற்றும் பர்சிங்சார் அனல் மின் நிலையம் ஆகியவை இந்தியாவில் இயங்கும் அனைத்து பழுப்பு நிலக்கரி மின் நிலையங்களில், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.
பிப்., 5ம் தேதி என்.எல்.சி.,யின் பங்கு விலை, ஒரு பங்குக்கு, 293.75ஐ எட்டியதன் வாயிலாக சந்தை மூலதனம் 40,700 கோடி ரூபாயை தொட்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை வணிகமாக்குவதில் கவனம் செலுத்துவதற்காக, என்.எல்.சி.யின் முழு உரிமைக்குரிய துணை நிறுவனமான என்.எல்.சி., இந்தியா ரினியூவபள் லிமிடெட் நிறுவப்பட்டது.
என்.எல்.சி.,யில், எதிர்கால புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை கையாள, என்.எல்.சி.ஐ.எல்., நிறுவனத்தின் முழு உரிமை நிறுவனமான என்.எல்.சி., இந்தியா கிரீன் எனர்ஜி லிமிடெட் என்ற நிறுவனம் நிறுவப்பட்டது.
இந்நிறுவனத்தில், மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் நிறுவன குழுவின் வரிக்கு முந்தைய லாபம், 2,882 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட, 2,056 கோடியுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

