/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாய் குறுக்கிட்டதால் விபத்து சிதம்பரத்தில் மூதாட்டி பலி
/
நாய் குறுக்கிட்டதால் விபத்து சிதம்பரத்தில் மூதாட்டி பலி
நாய் குறுக்கிட்டதால் விபத்து சிதம்பரத்தில் மூதாட்டி பலி
நாய் குறுக்கிட்டதால் விபத்து சிதம்பரத்தில் மூதாட்டி பலி
ADDED : ஆக 13, 2024 04:50 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில், நாய் குறுக்கிட்டதால் பைக் கவிழ்ந்ததில், அதில் பயணித்த மூதாட்டி இறந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி உமையாள்பதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கையன் மனைவி சந்திரஉதயம், 65; கடந்த 11ம் தேதி மாலை சீர்காழியில் இருந்து, உறவினர் மணிகண்டன் என்பவருடன், பைக்கில் சிதம்பரத்திற்கு வந்தார்.
சிதம்பரம் அருகே பொய்யாபிள்ளை சாவடி மெயின் ரோட்டில் குறுக்கிட்ட நாய் மீது மோதாமல் இருக்க, மணிகண்டன் சடன் பிரேக் பிடித்தார். அதில் பைக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
அதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சந்திர உதயத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார்.
இதுகுறித்து, சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.